… எனக்கும் உமருக்கும் அமீரகத்தில் இப்போது உறவும் இல்லை, வரவும் இல்லை; அதனால் எந்தப் பற்றும் இல்லை! எல்லாப் பணிகளையும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து ”எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று சொல்லிக் கொண்டு வரவேற்பறையில் அமர்கிறோம். அன்று தேதி செப்டம்பர் 11 2001. புறப்படுவதற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன! அந்த நான்கு நாட்களில் உறவினர்களையும் நண்பர்களையும் நேரில் காணவேண்டும்; அல்லது தொலைபேசியில் அவர்களுடன் பேசவேண்டும். வீட்டுக்குத் தேவையான சில பொருள்கள் வாங்க வேண்டும். மீதி நாட்களில் உடலுக்கும் உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறோம்.உமர் சோபாவில் அமர்ந்து தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் என் சிந்தனையைப் பின்னோக்கி ஓடவிடுகிறேன்! பள்ளி, கல்லூரி அளவிலும் மாநில அளவிலும் சித்திரத்தின் சரித்திரத்தில் முதல் இடம் பிடித்து, அறுபது வயது வரை கவலை இல்லை என்று சொல்லக் கூடிய தூய ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு, ஷெர்ஷாவையும் ஷாஜஹானையும் நடத்திச்

View Entire Article on InsideEVS.com