உமர்தம்பியும் அவர் மனைவியும் எங்கள் சகோதரி மகன் அபுல் ஹசன் சாதலியும் துபாயிலிருந்து 13-09-1999 அன்று ஊர் புறப்பட்டு வந்தார்கள். அபுல்ஹசன் அவரது திருமணத்திற்காக ஊர் வருகிறார். உமர் தம்பியின் மனைவி இந்தியாவில் நிரந்தரமாகத் தங்க வருகிறார். எனவே உடன் வரும் பொருள்கள் அதிகம் இருந்தன. அவற்றை அங்குமிங்கும் நகர்த்துவது கடினமாக இருந்தது. ஒருவாறாக அவர்களை நாங்கள் வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டோம்.அவர்கள் பயணித்தது ஏர் இந்தியா ஜம்போ ஜெட் (Boeing 747) விமானம். அவர்கள் சென்னை வந்து அங்கு இரண்டு நாட்கள் தங்கி ஊர் வர வேண்டும். உமர் ஏர்ப்போர்டிலிருந்து போன் செய்தார். பயணத்திற்கான எல்லா நடை முறைகளும் நல்லபடியாக முடிந்ததாகச் சொன்னார். அவர்கள் மூவரும் புறப்பட்ட செய்தியை வீட்டுக்குத் தொலை பேசி மூலம் தெரிவித்துவிட்டோம். அடுத்து நாங்கள் சென்னையிலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தது அவர்கள் நலமாக வந்து சேர்ந்துவிட்டார்கள் என்ற நல்ல செய்தியை. எதிர்பர்த்திருந்தபடியே ஊர் வந்து சேர்ந்த

View Entire Article on InsideEVS.com