மர்ஹூம் ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன்செயலாளர், தாளாளர்; M.K.N. மதரசாமறைவு: 02-10-1986 சுருக்கமாகப் பேசுகின்ற எஸ்.எம்.எஸ்.,சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்!உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;மசியாத மனிதரை மசிய வைப்பார்!திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்குட்டினால் அனுபவம்! இவைகளின்சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்சொந்தக்காலில் நின்ற செயலாளர்!மடிக் கணினி வருமுன்னரேமடியில் வைத்துத் தட்டச்சில்,பல பணி ஆணை அச்சிட்டு,படித்தோர்க்குப் பணி தந்தார்.ஆங்கிலத்தை ஆளும் துரை! இவர்ஆளுமையில் அடங்கும் துறைகள்;கோட்டுகளும் சூட்டுகளும் இவரிடம்மாட்டிக் கொண்டு குட்டுப்படும்! வாசகத்தை இவர் எழுதிடின்,திருத்துவோர் யாருளர்? பிறர்வாசகத்தை இவர் திருத்திடின், மறுத்துரைப்போர் யாருமிலர்! அலுவலகத்துக்கு ஓர் உடை,விழாவுக்கு என்று ஓர் உடை,பிரமுகரைச் சந்திக்க ஓர் உடைஎன்ற வழக்கம் உடையாரல்லர். யாவும் உடையார்க்கு உயருடையா?பயமே அறியார்க்குப் படை பலமா?தளரா நடையே போதும் அவருக்கு, அடையா இலக்கை அடைவதற்கு!நீட்டோலை வாசியா நின்றவரை,ஏட்டோடு பள்ளிக்கு வரச்செய்தார்!படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர்.பட்டறிவில்லா எம் போன்றோரை,பட்டை தீட்டி மதிப்

View Entire Article on InsideEVS.com