பகுதி – 2பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன்! மன்னியுங்கள்! மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்!  காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது! “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி?”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்! எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், என்றாலும் என்னினும் இளமையாகத் துறு துறு என்று இருந்தார், கல்லூரி நிர்வாகி!மாலையில் கல்லூரியைப் போய்ப் பார்த்தேன். ‘ஊர்தான் மோசம்; கலூரிக் கட்டிடம் அடுக்கு மாளிகையாக இருக்கும்’  என்று கற்பனைக் காற்றில் கட்டிய கோட்டை இடிந்து விழுந்தது! “இதுவா கல்லூரி?” என்று மூன்றாவது வியப்பு ஏற்பட்டது! அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது! கல்லூரி முற்றமும் கல்லூரிக் கட்டிடத்தின் நீண்ட கூடங்களும் தாழ்வாராமும் ஒரு சத்திரத்தை

View Entire Article on InsideEVS.com