1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு – செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் செல்வுக்கு ருபாய் …………. கொடுத்தனுப்பிக் கணக்கில் எழுதிக் கொள்ளவும்” என்று தாளாளர் ‘ரோக்கா’ (ஆணைச்சீட்டு) அனுப்புவார். இரும்புப் பெட்டியில் பணம் இருந்தாலும், விடுதிப் பணத்தைக் கல்லூரிச் செலவுக்குப் பயன் படுத்துவதை ஒப்பாமல், “பணம் கிடையாது” என்று அதே ரோக்காவின் பின் பக்கத்தில் எழுதித் திருப்பி அனுப்பிவிடுவேன்! இதனை மேlல் அதிகாரிகளுக்குக் கீழ்ப் படியாமை (insubordination) என்று நினைவூட்டுவார், சகோதரர் பாரூக். குற்றமோ இல்லையோ, தாளாளர் இதுக்காக என்னைக் கண்டித்ததும்  இல்லை; தண்டித்ததும் இல்லை! “முதல்வர் தனக்கோடி, இரும்புப் பெட்டிக்கு, சரியான பூதத்தைக் காவலாகப் போட்டிருக்கிறார்!” என்று மட்டும் சொல்வார்!நிறுவனங்களின் வரவு செலவுக்

View Entire Article on InsideEVS.com