சர்க்கரை நிர்வாகம் பகுதி – 9உமர் தம்பி துபையில் அல் குசைஸ் பகுதியில் வாழ்ந்தார். நானும் நாடு திரும்பும் வரை உமரோடு வாழ்ந்திருந்தேன். பிள்ளைகளுக்கு கல்வியில் உதவி செய்தல் என் போழுதுபோக்கானது. உமரின் பொழுதுபோக்கு என்னவாக இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. உறவினர்களும் நண்பர்களும் அடிக்கடி வந்து போவர்கள். வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். அமீரகத்தில் வாழ்ந்திருந்த நாட்களில் மறக்கமுடியாதவை அல் குசைஸ் வாழ்க்கை.உமர்தம்பி 1983 –ல் துபாய் வந்தார். ஈராண்டுகளுக்குப் பின் விடுப்பில் நாடு திரும்பினார். அல்ஹம்துலில்லாஹ்! அப்போது நல்ல உடல் நலத்தோடு இருந்தார். இரண்டு மாத விடுமுறையை மகிழ்ச்சியோடு கழித்துவிட்டு துபாய் திரும்பினார். இப்போது அவர் உடலில் மாற்றத்தைப் பார்தேன். உடல் மெலிந்திருந்தார். விளக்கம் கேட்டபோது தனக்கு சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாகச் சொன்னார். இப்போது உடலைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. உணவில் மிகவும் கட்டுப்பாட்டோடு இருந்தார். அடுத்தமுறை நாடு திரும்பியபோது சென்னையிலுள்ள நீரிழிவு நோய்

View Entire Article on InsideEVS.com