சமுதாய அரசியலா, $UM ஆதாய அரசியலா?ஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரை!உமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான்! சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான்! மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது! உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது! ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள்! இந்தியாவில் காந்திஜி வரை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது! காந்திஜியின் சீடர்களான லால் பகதூர் சாஸ்திரியும் கக்கன்ஜீயும் அரசியல் கற்பைக் காப்பாற்றினார்கள். சாஸ்திரி அரியலூர் இரயில் விபத்தின்போது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார்! மந்திரி ஆன பின்பும் கக்கன்ஜீ இரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்! கண்ணியத்தின் சின்னமான இஸ்மாயில் சாகிப் தன் ஓட்டு வீட்டுக்குத் தாமே ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தார். கர்மவீரர்

View Entire Article on InsideEVS.com